நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவுக்கும், நடிகர் விஷாகனுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

Advertisment

rajnikanth

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு விஷாகன்-சௌந்தர்யா தம்பதி பணி நிமித்தமாக லண்டனுக்கு எமிரேட்ஸ் வினானம் மூலம் சென்றுள்ளனர். ஹீத்ரூ விமான நிலையத்திற்கு வந்த அவர்களிடம் விமான நிலைய அதிகாரிகள் சோதனையிட்டபோது, விஷாகன்பாஸ்போர்ட் வைத்திருந்த பை விமானத்தில் திருடு போனது தெரியவந்தது.

திருடுபோன பையில் லட்சக்கணக்கான மதிப்புள்ள அமெரிக்க டாலர்களும் இருந்ததாக விஷாகன் தெரிவித்துள்ளார். பின்னர், அங்கிருந்த இந்தியத் தூதரக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அங்கு வந்த இந்திய தூதரக அதிகாரிகளுக்கு இவர்கள் இருவரும் ரஜினி காந்தி மகள் மற்றும் மருமகன் என்று தெரியவர உடனடியாக மாற்று பாஸ்போர்ட் கொடுத்துள்ளனர்.

Advertisment

alt="mahamuni" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="14d0dc2b-a5a3-4b45-8967-fee59a655034" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Mhamuni-336x150_1.jpg" />

இதையடுத்து, இருவரும் சென்னை திரும்பினர். விஷாகன் அளித்த புகாரின் பேரில் ஹீத்ரூ விமான நிலைய அதிகாரிகள் சிசிடிவி காட்சிகளை கொண்டு அவர்களுடைய பையை திருடியவரை தேடி வருகின்றனர்.